🔗

புகாரி: 5474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ»

قَالَ: ” وَالفَرَعُ: أَوَّلُ نِتَاجٍ كَانَ يُنْتَجُ لَهُمْ، كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيَتِهِمْ، وَالعَتِيرَةُ فِي رَجَبٍ


பாடம்: 4

அதீரா (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடல்.)

5474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச்செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே “ஃபரஉ” ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி “அதீரா” வாகும்.

அத்தியாயம்: 71