«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِكَبْشَيْنِ، وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ»
பாடம்: 7
கொம்புகள் உள்ள இரு செம்மறியாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது.
அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகின்றது.
உமாமா பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்து வந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள்.
5553. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன்.
அத்தியாயம்: 73