🔗

புகாரி: 5585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ البِتْعِ، فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


பாடம் : 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மா-க் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையினால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள்.

5585. ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 74