أَنَّهُ صَلَّى الظُّهْرَ، ثُمَّ قَعَدَ فِي حَوَائِجِ النَّاسِ فِي رَحَبَةِ الكُوفَةِ، حَتَّى حَضَرَتْ صَلاَةُ العَصْرِ، ثُمَّ أُتِيَ بِمَاءٍ، فَشَرِبَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَذَكَرَ رَأْسَهُ وَرِجْلَيْهِ، ثُمَّ قَامَ «فَشَرِبَ فَضْلَهُ وَهُوَ قَائِمٌ» ثُمَّ قَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُونَ الشُّرْبَ قِيَامًا، «وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ»
5616. நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) கூறினார்:
(ஒரு முறை) அலீ (ரலி) தம் (ஆட்சியின் போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள் அஸ்ர் தொழுகை வந்துவிட்டது. பிறகு தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் (அதை) அருந்திவிட்டுத் தம் முகத்தையும் தம் இரண்டு கைகளையும் கழுவினார்கள்.
(அறிவிப்பாளர் ஆதம் பின் அபூஇல்யாஸ் (ரஹ்), தலை மற்றும் கால்களையும் குறிப்பிட்டார்கள்.)
பிறகு (அலீ-ரலி-அவர்கள்) எழுந்து அதன் மீதத்தை நின்றுகொண்டு பருகினார்கள். பிறகு, “மக்களில் சிலர் நின்றுகொண்டு (நீர்) அருந்துவதை வெறுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களோ நான் செய்ததைப் போன்று செய்தார்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 74