🔗

புகாரி: 5635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجِنَازَةِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ المُقْسِمِ، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، وَعَنِ الشُّرْبِ فِي الفِضَّةِ، أَوْ قَالَ: آنِيَةِ الفِضَّةِ، وَعَنِ المَيَاثِرِ وَالقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالدِّيبَاجِ وَالإِسْتَبْرَقِ


5635. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள்.

  1. நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும்,
  2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும்,
  4. விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும்,
  5. ஸலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும்,
  6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
  7. சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும்,
  2. (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும்,
  3. மென்பட்டுத் திண்டு-மெத்தை (மீஸரா),
  4. பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும்,
  5. சாதாரணப் பட்டு,
  6. அலங்காரப் பட்டு,
  7. தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்: 74