🔗

புகாரி: 5799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي سَفَرٍ، فَقَالَ: «أَمَعَكَ مَاءٌ» قُلْتُ: نَعَمْ، فَنَزَلَ عَنْ رَاحِلَتِهِ، فَمَشَى حَتَّى تَوَارَى عَنِّي فِي سَوَادِ اللَّيْلِ، ثُمَّ جَاءَ، فَأَفْرَغْتُ عَلَيْهِ الإِدَاوَةَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ مِنْهَا، حَتَّى أَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ الجُبَّةِ، فَغَسَلَ ذِرَاعَيْهِ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ» فَمَسَحَ عَلَيْهِمَا


பாடம் : 11 புனிதப் போரின்போது கம்பளி நீளங்கி (ஜுப்பா) அணிவது.

5799. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நான் ஒரு பயணத்தின் ஓரிரவு நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்களின் மீது ஊற்றினேன். அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், ‘அவற்றைவிட்டுவிடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்’ என்று சொல்லி, (ஈரக்கையால் அவற்றைத்) தடவி (மஸஹ் செய்து) கொண்டார்கள்.18

Book : 77