🔗

புகாரி: 5832

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَبِسَ الحَرِيرَ فِي الدُّنْيَا فَلَنْ يَلْبَسَهُ فِي الآخِرَةِ»


5832. ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்’ என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்கலானார்கள்.

உடனே நான், ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்தா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘(ஆம்) நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான்’ என்று கூறிவிட்டு, ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனறார்கள்.

Book :77