«مِنَ الفِطْرَةِ قَصُّ الشَّارِبِ»
பாடம் : 63
மீசையைக் கத்தரிப்பது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.
5888. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book : 77