أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ المُسْلِمُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ اليَهُودِ، فَقَالَ عُمَرُ: أَوَلاَ تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلاَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ»
604. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து (தொழுதுக்) கொள்வார்கள்.
ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்கள் வைத்திருக்கிற (ஊதுகுழல்) கொம்பைப் போன்று நாமும் (ஏற்படுத்தி) கொம்பூதலாமே! என்று கூறினர்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை அனுப்பி வைக்கலாமே?” என்று கூறினார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் “பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)
அத்தியாயம்: 10