لَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»، وَقَالَ: هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
613. யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:
தொழுகை அறிவிப்பாளர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள்.
மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம்: 10