«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»
பாடம் : 9
பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது.
பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலா)னார்கள்.
615. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.
தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 10