«لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ – أَوْ أَحَدًا مِنْكُمْ – أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ يُنَادِي بِلَيْلٍ – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الفَجْرُ – أَوِ الصُّبْحُ -» وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا وَقَالَ زُهَيْرٌ: «بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى، ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ»
பாடம்: 13
ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் பாங்கு சொல்வது.
621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் பின்இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’.
இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு (மேல் கீழாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம்) ‘ஃபஜ்ர்’ அல்லது ‘ஸுப்ஹ்’ அல்ல” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) அவர்கள், ‘இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கையில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றின்மீது வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நீட்டி (“பரவலாகத் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; செங்குத்தாய் தோன்றுவது அல்ல” என்ற கருத்தில்) சைகை செய்தார்கள்.
அத்தியாயம்: 10