🔗

புகாரி: 6263

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ المُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»


பாடம்: 27

கரம் பற்றுதல் (முஸாஃபாஹா)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தைக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது என் உள்ளங்கை அவர்களின் உள்ளங்கைகளுக்கு இடையே இருந்தது.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறைவசனம் அருளப்பெற்ற பின்) நான் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

6263. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர்களிடையே இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

அத்தியாயம்: 79