6284. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன:
1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக் கொள்ள, அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.)
2. இஹ்திபா, அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய அமர்வது.
3. முலாமஸா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.)
4. முனாபதா. (ஒருவரின் மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book :79