🔗

புகாரி: 6320

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ، فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ، ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ “


பாடம்: 13

6320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:

பிஸ்மிக்க ரப்பீ வளஃத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.

(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இந்தச் செய்தியை ஸுஹைர் பின் முஆவியா அறிவித்துள்ளதைப் போன்றே அபூளம்ரா, இஸ்மாயீல் பின் ஸகரிய்யா ஆகியோர் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் —> அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

யஹ்யா பின் ஸயீத், பிஷ்ர் பின் முஃபள்ளல் ஆகியோர் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

மாலிக் இமாம், இப்னு அஜ்லான் ஆகியோர் ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


அத்தியாயம்: 80