🔗

புகாரி: 6543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَيَدْخُلَنَّ الجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا، أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ – شَكَّ فِي أَحَدِهِمَا – مُتَمَاسِكِينَ، آخِذٌ بَعْضُهُمْ بِبَعْضٍ، حَتَّى يَدْخُلَ أَوَّلُهُمْ وَآخِرُهُمُ الجَنَّةَ، وَوُجُوهُهُمْ عَلَى ضَوْءِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ»


6543. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீரா (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (ஒரே நேரத்தில்) சொர்க்கத்தில் நுழையும் அளவுக்கு (ஓரணியில்) செல்வார்கள். மேலும், அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் முழு நிலவு பிரகாசிப்பதைப் போன்று பிரகாசிக்கும்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.124

Book :83