பாடம் : 26 நேர்த்திக்கடனை நிறைவேற்றுதல் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (-நல்லவர்கள்) நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். (76:7)
6692. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லையா? நபி(ஸல்) அவர்கள் ‘நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது’ என்று கூறினார்கள். 93
Book : 83