🔗

புகாரி: 6748

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَجُلًا لاَعَنَ امْرَأَتَهُ فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَانْتَفَى مِنْ وَلَدِهَا، فَفَرَّقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا، وَأَلْحَقَ الوَلَدَ بِالْمَرْأَةِ»


பாடம் : 17

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த பெண் (தன் பிள்ளைகளிடமிருந்து) வாரிசுரிமை பெறுவது.36

6748. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தம் மனைவிக்கு எதிராக சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார். மேலும், அவர் அவளுடைய குழந்தையைத் தமதல்ல என்றார். எனவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.37

Book : 86