🔗

புகாரி: 6815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ، فَنَادَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي زَنَيْتُ، فَأَعْرَضَ عَنْهُ حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَبِكَ جُنُونٌ» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ أَحْصَنْتَ» قَالَ: نَعَمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ»


பாடம் : 22

(விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், பைத்தியக்காரன் தெளிவடையும் வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும் வரையிலும் தூங்குபவன் விழிக்கும் வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டு விட்டது  (-தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.31

6815. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு முறை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள், ‘உமக்குப் பைத்தியமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘(எனக்குப் பைத்தியம்) இல்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘உமக்குத் திருமணமாம்விட்டதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (திருமணமாம்விட்டது)’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள்.32

Book : 86