🔗

புகாரி: 6817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ» زَادَ لَنَا قُتَيْبَةُ، عَنِ اللَّيْثِ: «وَلِلْعَاهِرِ الحَجَرُ»


பாடம் : 23

விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான்.

6817. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சையிட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்’ என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) ‘சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனைவிட்டு நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!’ என்றார்கள்.

(அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) லைஸ் இப்னு ஸஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள், ‘விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்’ என்பதையும் அதிகப்படியாக எமக்கு அறிவித்தார்கள்.34

Book : 86