🔗

புகாரி: 695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، – وَهُوَ مَحْصُورٌ – فَقَالَ: إِنَّكَ إِمَامُ عَامَّةٍ، وَنَزَلَ بِكَ مَا نَرَى، وَيُصَلِّي لَنَا إِمَامُ فِتْنَةٍ، وَنَتَحَرَّجُ؟ فَقَالَ: «الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ، فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ»


பாடம் : 56 குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.

நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும்என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

695. உபைதுல்லா இப்னு அதீ கூறினார்:

உஸ்மான்(ரலி) முற்றுகையிடப் பட்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்று ‘நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர் இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்’ என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோது அத்தவறுகளைவிட்டும் நீ ஒதுங்கிக் கொள்’ என உஸ்மான்(ரலி) கூறினார்.

‘பேடியை (ஆணும் பெண்ணுமற்றவர்) பின்பற்றி அவசியமேற்பட்டால் தவிர தொழக் கூடாது’ என ஸுஹ்ரி கூறுகிறார்.
Book : 10