لَمَّا سَارَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِلَى مُعَاوِيَةَ بِالكَتَائِبِ، قَالَ عَمْرُو بْنُ العَاصِ لِمُعَاوِيَةَ: أَرَى كَتِيبَةً لاَ تُوَلِّي حَتَّى تُدْبِرَ أُخْرَاهَا، قَالَ مُعَاوِيَةُ: مَنْ لِذَرَارِيِّ المُسْلِمِينَ؟ فَقَالَ: أَنَا، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ: نَلْقَاهُ فَنَقُولُ لَهُ الصُّلْحَ – قَالَ الحَسَنُ: وَلَقَدْ سَمِعْتُ أَبَا بَكْرَةَ، قَالَ: بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، جَاءَ الحَسَنُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»
பாடம் : 20 (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியது:
7109. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(அபூ ஜஅஃபர்) மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அபூ மூஸா(ரஹ்) அவர்களை சந்தித்தேன். அன்னார் (கூஃபாவின் நீதிபதியான) அப்துல்லாஹ் இப்னு ஷுப்ருமா(ரஹ்) அவர்களிடம் வந்திருக்கிறார்கள். அபூ மூஸா(ரஹ்) அவர்கள் ‘என்னை (கூஃபாவின் ஆளுநர்) ஈசா இப்னு மூஸாவிடம் அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும்’ என்று இப்னு ஷுப்ருமா விஷயத்தில் (ஏதும் செய்துவிடுவார் என்று) இப்னு ஷுப்ருமா பயந்துவிட்டார் போலும் அதனால் (அபூ மூஸாவின் கோரிக்கையை ஏற்று) அவர் செயல்படவில்லை. பின்னர் ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாக அபூ மூஸா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள் பெரும் படையணிகளுடன் முஆவியா(ரலி) அவர்களை நோக்கிப் பயணமானார்கள். (இதை அறிந்த முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அவர்கள் முஆவியா(ரலி) அவர்களிடம், ‘தன் எதிரணியைப் புறமுதும்ட்டு ஓடச் செய்யாத வரையில் பின்வாங்காத பெரும் படையணியை நான் பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்கள். முஆவியா(ரலி) அவர்கள், ‘(அவர்கள் கொல்லப்பட்டால்) முஸ்லிம்களின் (வருங்கலாச்) சந்ததிகளுக்கு (பொறுப்பேற்க) யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்க, அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அவர்கள், ‘நான் (இருக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களும்ம அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களும், ‘நாங்கள் ஹஸன்(ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமாதானம் செய்துகொள்ளும் படி கூறுகிறோம்’ என்றார்கள்.
தொடர்ந்து ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடை மீது நின்று) உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஹஸன்(ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானம் செய்துவைப்பான்’ என்று கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
Book : 92