7308. அஃமஷ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அபூ வாயில்(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் ஸிஃப்பீன் போரில் கலந்து கொண்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (கலந்து கொண்டேன்)’ என்று கூறிவிட்டு, ‘நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என (பின்வருமாறு) அறிவித்தார்கள்.
ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) கூறினார்: மக்களே! (இந்தப் போரில் கலந்து கொள்ளாததற்காக என் மீது குற்றம் சாட்டாதீர்கள். மாறாக, கலந்து கொள்ள வேண்டும் என்று) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள். அபூ ஜந்தல் (அபயம் தேடிவந்த) நாளில், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய, (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இது (-ஸிஃப்பீன் சண்டை) வேறு விஷயம். (முஸ்லிம்களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்.)38
அபூ வாயில்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஸிஃப்பீன் போரில் நான் கலந்து கொண்டேன். ஸிஃப்பீன் போர் ஒரு கெட்ட நிகழ்ச்சி.
Book :96