🔗

புகாரி: 7364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«اقْرَءُوا القُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «سَمِعَ عَبْدُ الرَّحْمَنِ سَلَّامًا»


பாடம் : 26 கருத்துமாறுபாடு விரும்பத் தக்கதன்று.

7364. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்! (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.

என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.99

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஹதீஸை அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்கள் சல்லாம் இப்னு முத்தீஉ(ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள்.

Book : 96