🔗

புகாரி: 7429

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يَتَعَاقَبُونَ فِيكُمْ: مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ العَصْرِ وَصَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِكُمْ، فَيَقُولُ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ


பாடம் : 23 வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள் எனும் (70:4ஆவது) இறைவசனம். புகழ்மிகுந்த அல்லாஹ் கூறுகின்றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச் செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா! என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத் திற்கு) உயர்த்துகின்றது. துல் மஆரிஜ்’ (ஏணிப் படிகளைக் கொண்டவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச் செல்கின்றனர்.68

7429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரவில் சில வானவர்களும், பலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கிறார்கள். அவர்களிடம் அல்லாஹ் ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்?’ என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே – கேட்கிறான். ‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.69

Book : 97