«رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ، أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ، قَالَ: فَرَجَّعَ فِيهَا، قَالَ: ثُمَّ قَرَأَ مُعَاوِيَةُ يَحْكِي قِرَاءَةَ ابْنِ مُغَفَّلٍ وَقَالَ: لَوْلَا أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيْكُمْ لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ ابْنُ مُغَفَّلٍ يَحْكِي النَّبِيَّ ﷺ، فَقُلْتُ لِمُعَاوِيَةَ: كَيْفَ كَانَ تَرْجِيعُهُ؟ قَالَ: آ آ آ ثَلَاثَ مَرَّاتٍ.»
7540. ஷுஅபா இப்னு அல்ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்:
முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகம் ஒன்றின் மீது இருந்தபடி ‘அல்ஃபத்ஹ் எனும் (48 வது) அத்தியாயத்தை’ அல்லது ‘அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை’ ஓதிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள்’ எனக் கூறிவிட்டு, இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள்.
பிறகு, ‘உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதிய வித்தை இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன்’ என்றார்கள். நான், முஆவியா(ரஹ்) அவர்களிடம், ‘அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி?’ என்று கேட்க (‘ஆ’ எனும் இடத்தில்) ‘ஆ..ஆ..ஆ..’ என்று மும்முறை (இழுத்து) அவர்கள் ஓதினார்கள்’ என்றார்கள்.
Book :97