🔗

புகாரி: 7561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلَ أُنَاسٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكُهَّانِ، فَقَالَ: «إِنَّهُمْ لَيْسُوا بِشَيْءٍ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّهُمْ يُحَدِّثُونَ بِالشَّيْءِ يَكُونُ حَقًّا، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الكَلِمَةُ مِنَ الحَقِّ يَخْطَفُهَا الجِنِّيُّ، فَيُقَرْقِرُهَا فِي أُذُنِ وَلِيِّهِ كَقَرْقَرَةِ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهِ أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ»


7561. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவித்தார்கள்; அது உண்மையாகி விடுகிறதே!’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்’ என்று பதிலளித்தார்கள்.200

Book :97