«فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ القُرْآنِ أَجْزَأَتْ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ»
772. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன்) ஓதப் பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம்.
(தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும்.
அத்தியாயம்: 10