إِذَا أَمَّنَ الإِمَامُ، فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
– وَقَالَ ابْنُ شِهَابٍ – وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: آمِينَ
பாடம்: 111
(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின்) உரத்த குரலில் “ஆமீன்” கூறுவது.
“ஆமீன்” என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும், அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளிவாசலில் பேரொலி எழும் அளவுக்கு (உரத்த குரலில்) “ஆமீன்” கூறினர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தலைமைத் தாங்கித் தொழுவிப்பவரை அழைத்து, “ஆமீன்” கூறும் வாய்ப்பை எனக்குத் தவறும்படி செய்து விடாதீர் என்று கூறுவார்கள்.
நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆமீன்” கூறாமல் இருக்க மாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமுட்டுவார்கள். “ஆமீன்” கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் “ஆமீன்” கூறும்போது நீங்களும் “ஆமீன்” கூறுங்கள்! ஒருவர் கூறும் “ஆமீன்” வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள், “ஆமீன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்.
அத்தியாயம்: 10