🔗

புகாரி: 852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لاَ يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لاَ يَنْصَرِفَ إِلَّا عَنْ يَمِينِهِ «لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ»


பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும்.

அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கம் திரும்புவதை மட்டுமே தேர்வு செய்வோரை அவர்கள் கண்டிப்பார்கள். 

852. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தன்னுடைய தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி(ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.
Book : 10