🔗

புகாரி: 930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ»


பாடம்: 32

இமாம் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் ஒருவர் (பள்ளிக்குள்) வரக் கண்டால் அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு பணிக்க வேண்டும். 

930. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 11