«إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا»
பாடம்: 30
தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்.
(ஒருமுறை பெரும்பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள், எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்றுமுறை கேட்டார்கள்.
94. ‘நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்; ஏதாவது ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அத்தியாயம்: 3