«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
பாடம் : 11
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நற்செயல் (வழிபாடு)கள் புரிவதன் சிறப்பு.
(22:28ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வார்கள் என்பதிலுள்ள குறிப்பிட்ட நாட்கள் என்பது (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும். எண்ணப்பட்ட நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீக் நாட்களைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும் போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள். நஃபிலான தொழுகைக்குப் பிறகும் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள்.
969. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள்.
Book : 13