🔗

dalail-annubuwwah-bayhaqi-1594: 1594

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي رَجُلٌ أَسْوَدُ اللَّوْنِ، قَبِيحُ الْوَجْهِ، مُنْتِنُ الرِّيحِ، لَا مَالَ لِي، فَإِنْ قَاتَلْتُ هَؤُلَاءِ حَتَّى أُقْتَلَ أَدْخُلُ الْجَنَّةَ؟ قَالَ: «نَعَمْ» . فَتَقَدَّمَ فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَأَتَى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَقْتُولٌ، فَقَالَ: «لَقَدْ أَحْسَنَ اللهُ وَجْهَكَ، وَطَيَّبَ رُوحَكَ، وَكَثَّرَ مَالَكَ» قَالَ: وَقَالَ لِهَذَا أَوْ لِغَيْرِهِ: «لَقَدْ رَأَيْتُ زَوْجَتَيْهِ مِنَ الْحُورِ الْعِينِ تُنَازِعَانِهِ جُبَّتَهُ عَنْهُ يَدْخُلَانِ فِيمَا بَيْنَ جِلْدِهِ وَجُبَّتِهِ»


1594. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கறுத்த நிறமுடையை மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் கறுத்த நிறமுள்ள, அசிங்க முகம் கொண்ட, நாற்றமுள்ள மனிதன்; எனக்கு செல்வமும் இல்லை. நான் (போரில்) இந்த எதிரிகளிடம் சண்டையிட்டு கொல்லப்பட்டால் சொர்க்கத்தில் நுழைவேனா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அவர் முன்னேறிச் சென்று சண்டையிட்டு அதில் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டவராக கிடந்த போது அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், “உனது முகத்தை அல்லாஹ் அழகாக்கிவிட்டான்; உனது உயிரை நறுமணமாக்கிவிட்டான்; உனது செல்வத்தை அதிகமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.

மேலும் அவரின் விசயத்திலோ அல்லது மற்றவரின் விசயத்திலோ நபி (ஸல்) கூறினார்கள்:

அவரின் இரண்டு சொர்க்கத்து கண்ணழகிகள் அவர் அணிந்திருக்கும் ஆடையினுள் நுழைவதற்கு சண்டையிட்டுக்கொள்வதை நான் பார்த்தேன்.