«مَنْ صَلَّى صَلَاةً مَكْتُوبَةً أَوْ تَطَوُّعًا فَلْيَقْرَأْ فِيهَا بِأُمِّ الْكِتَابِ وَسُورَةً مَعَهَا , فَإِنِ انْتَهَى إِلَى أُمِّ الْكِتَابِ فَقَدْ أَجْزَى , وَمَنْ صَلَّى صَلَاةً مَعَ إِمَامٍ يَجْهَرُ فَلْيَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي بَعْضِ سَكَتَاتِهِ , فَإِنْ لَمْ يَفْعَلْ فَصَلَاتُهُ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ».
1223. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடமையான அல்லது உபரியான தொழுகைகளைத் தொழக்கூடியவர் அதில் “உம்முல் கிதாப் (அல்ஹம்து ஸூராவை)யும் அதனுடன் வேறொரு ஸூராவையும் ஓதிக் கொள்ளட்டும். அல்ஹம்து ஸூராவுடன் நிறுத்திக் கொண்டாலும் அது அவருக்குப் போதுமானதாகும். இமாம் சப்தமிட்டு ஓதும் போது, அவருடன் தொழக்கூடியவர் இமாம் நிறுத்துமிடங்களில் “அல்ஹம்து ஸூராவை” ஓதிக் கொள்ளட்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அவருடைய தொழுகை குறை உடையதாகும். முழுமையற்றதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)