بِتُّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنْظُرَ كَيْفَ يَقْنُتُ فِي وِتْرِهِ , فَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ ثُمَّ بَعَثْتُ أُمِّي أُمَّ عَبْدٍ , فَقُلْتُ: تَبِيتِي مَعَ نِسَائِهِ وَانْظُرِي كَيْفَ يَقْنُتُ فِي وِتْرِهِ فَأَتَتْنِي فَأَخْبَرَتْنِي أَنَّهُ قَنَتَ قَبْلَ الرُّكُوعِ
1662. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வித்ருத் தொழுகையில் எவ்வாறு குனூத் ஓதுகிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் இரவில் தங்கினேன். அப்போது அவர்கள், ருகூஃ செய்வதற்கு முன் குனூத் ஓதினார்கள். பிறகு நான், எனது தாயார் உம்மு அப்த் அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் தங்கியிருந்து நபி (ஸல்) அவர்கள், வித்ருத் தொழுகையில் எவ்வாறு குனூத் ஓதுகிறார்கள் என்பதைப் பாருங்கள்! என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தேன். (அவ்வாறே அவர்கள் சென்று இரவில் தங்கிவிட்டு) நபி (ஸல்) அவர்கள், ருகூஃ செய்வதற்கு முன் குனூத் ஓதினார்கள் என்று எனக்கு தெரிவித்தார்கள்.