🔗

daraqutni-1795: 1795

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

«إِنَّ لَمَهْدِيِّنَا آيَتَيْنِ لَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ , يَنْخَسِفُ الْقَمَرُ لَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ , وَتَنْكَسِفُ الشَّمْسُ فِي النِّصْفِ مِنْهُ , وَلَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ»


1795. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் உள்ளன. அவை, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை ஏற்பட்டதில்லை.

1 . ரமளான் மாதத்தின் முதல் இரவில் சந்திர கிரகணம் ஏற்படுவதாகும்.
2 . அதன் பாதியில் (அதாவது 14 அல்லது 15 ஆம் நாளில்) சூரிய கிரகணம் ஏற்படுவதாகும்.

இவ்விரண்டும் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை நிகழ்ந்ததில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ்