«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ , وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي , وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ».
قَالَ ابْنُ صَاعِدٍ: يُقَالُ أَنَّ أَبَاهَا سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ
225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(ரபாஹ் பின் அப்துல்லாஹ் அவர்களின் பாட்டி அஸ்மா பின்த் ஸயீத் ஆவார்) அஸ்மா அவர்களின் தந்தை ஸயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) ஆவார் என அறிவிப்பாளர் யஹ்யா பின் ஸாயித் கூறினார்.