🔗

daraqutni-4760: 4760

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا صَلَّى وَقَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشِهِ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ , وَقَالَ: «بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَنْ مَنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»


4760. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள். ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்); இது என் சார்பாகவும், என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும்” எனக் கூறினார்கள்.