🔗

daraqutni-86: 86

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَخَّنْتُ مَاءً فِي الشَّمْسِ , فَقَالَ: «لَا تَفْعَلِي يَا حُمَيْرَا فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ»


86. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ஹுமைராவே! (சிகப்பழகியே!) இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது மிகவும் அரிதான செய்தி. இதில் வரும் காலித் பின் இஸ்மாயீல் என்பவர் (பொய்யர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால்) கைவிடப்பட்டவர் ஆவார்.