🔗

ஸுனன் தாரிமீ: 1264

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَا أَبَا ذَرٍّ كَيْفَ تَصْنَعُ إِذَا أَدْرَكْتَ أُمَرَاءَ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قُلْتُ: مَا تَأْمُرُنِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا. وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ نَافِلَةً»


1264. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும்  தலைவர்களை நீர் அடைந்தால் உமது நிலை எப்படி இருக்கும்?” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுக் கொள்வீராக! மக்களுடன் சேர்ந்து தொழும் தொழுகையை (நஃபிலான) உபரியான தொழுகையாக ஆக்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள்.