🔗

ஸுனன் தாரிமீ: 1347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، فَإِذَا رَكَعَ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» وَلَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.


பாடம்:

ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது கூறவேண்டியவை.

1347. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது (அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி) தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். மேலும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)