أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «الصَّلَوَاتِ الْخَمْسَ، وَالصِّيَامَ»، فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَائِعِ الْإِسْلَامِ، فَقَالَ: وَالَّذِي أَكْرَمَكَ لَا أَتَطَوَّعُ شَيْئًا، وَلَا أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ “. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ – أَوْ دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقَ -»
1619. ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!’ என்று பதிலளித்தார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மற்ற) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், ‘உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதனையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ளவற்றில் எதனையும் நான் குறைக்கவுமாட்டேன்’ என்று கூறிவிட்டுத் திரும்பிச் செல்லலா)னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” அல்லது “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)