🔗

ஸுனன் தாரிமீ: 1769

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ». قَالَ: فَلَقِيتُ ثَوْبَانَ بِمَسْجِدِ دِمَشْقَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: صَدَقَ، أَنَا صَبَبْتُ لَهُ الْوَضُوءَ “

قَالَ عَبْد اللَّهِ: «إِذَا اسْتَقَاءَ»


1769. நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள்.” என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், “அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரஹ்)