🔗

ஹாகிம்: 1196

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

وَجَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ إِلَى بِلَادِ الْحَبَشَةِ ، فَلَمَّا قَدِمَ اعْتَنَقَهُ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ ، ثُمَّ قَالَ : أَلَا أَهَبُ لَكَ ، أَلَا أُبَشِّرُكَ ، أَلَا أَمْنَحُكَ ، أَلَا أُتْحِفُكَ ؟ قَالَ : نَعَمْ ، يَا رَسُولَ اللَّهِ . قَالَ : تُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِالْحَمْدِ وَسُورَةٍ ، ثُمَّ تَقُولُ بَعْدَ الْقِرَاءَةِ وَأَنْتَ قَائِمٌ قَبْلَ الرُّكُوعِ : سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ خَمْسَ عَشْرَةَ مَرَّةً ، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهُنَّ عَشْرًا تَمَامَ هَذِهِ الرَّكْعَةِ قَبْلَ أَنْ تَبْتَدِئَ بِالرَّكْعَةِ الثَّانِيَةِ ، تَفْعَلُ فِي الثَّلَاثِ رَكَعَاتٍ كَمَا وَصَفْتَ لَكَ حَتَّى تُتِمَّ أَرْبَعَ رَكَعَاتٍ


1196. நபி (ஸல்) அவர்கள், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன்.

நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும், ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவைகள் கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10 தடவைகள் கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)