أَنَّ عَائِشَةَ أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مِنْ أَيْنَ أَقْبَلْتِ؟ قَالَتْ: مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، فَقُلْتُ لَهَا: أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ قَالَتْ: نَعَمْ، «كَانَ قَدْ نَهَى، ثُمَّ أُمِرَ بِزِيَارَتِهَا»
1392. அப்துல்லாஹ் பின் அபீ முலைகா கூறுகிறார் :
ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்கு சென்று வரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்ய வில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றை சந்தித்து வருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.