«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ، وَمَعَالِيَ الْأَخْلَاقِ، وَيُبْغِضُ سَفْسَافَهَا»
152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் இருவகை அறிவிப்பாளர்தொடர்களும் பலமானது ஆகும். ஆனால், இந்த ஹதீஸை புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் தங்களின் நூல்களில் இடம்பெறச் செய்யவில்லை.
ஹதீஸ் எண்-151 இல் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் ஸுலைமான் பின் கமரீ என்பவர் எகிப்து நாட்டச் சேர்ந்தவர். இவர் நம்பிக்கைக்குரியவர், பலமானவர் ஆவார். ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஃளலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் சிலரை விட்டுவிட்டு அறிவித்துள்ளதால் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகிறது.