🔗

ஹாகிம்: 2027

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ، وَمَا بَيْنَهُ، وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ، إِلَّا كَمَا بَيْنَ سَوَّادِ الْعَيْنِ، وَبَيَاضِهَا مِنَ الْقُرْبِ»


2027. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால், புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை பதிவு செய்யவில்லை.