🔗

ஹாகிம்: 311

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ»


311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான உம்ரா செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது)  கிடைக்கும்.

(இவ்வாறே) ஒருவர் மாலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது) கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)