🔗

ஹாகிம்: 3317

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

لَمَّا جَاءَتْ رُسُلُ اللَّهِ لُوطًا ظَنَّ أَنَّهُمْ ضِيفَانٌ لَقَوْهُ فَأَدْنَاهُمْ حَتَّى أَقْعَدَهُمْ قَرِيبًا، وَجَاءَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ، فَأَقْعَدَهُنَّ بَيْنَ ضِيفَانِهِ وَبَيْنَ قَوْمِهِ، فَجَاءَ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ، فَلَمَّا رَآهُمْ قَالَ: ” {هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهُرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي} [هود: 78] قَالُوا {مَا لَنَا فِي بَنَاتِكِ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ} [هود: 79] {قَالَ لَوْ أَنَّ لِيَ بِكُمُ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ} [هود: 80] فَالْتَفَتَ إِلَيْهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ {إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ} [هود: 81] قَالَ: فَطَمَسَ أَعْيُنَهُمْ فَرَجَعُوا وَرَاءَهُمْ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا حَتَّى خَرَجُوا إِلَى الَّذِينَ بِالْبَابِ فَقَالُوا: جِئْنَاكُمْ مِنْ عِنْدِ أَسْحَرِ النَّاسِ، قَدْ طَمَسَ أَبْصَارَنَا، فَانْطَلَقُوا يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا، حَتَّى دَخَلُوا الْقَرْيَةَ فَرُفِعَتْ فِي بَعْضِ اللَّيْلِ، حَتَّى كَانَتْ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى إِنَّهُمْ لَيَسْمَعُونَ أَصْوَاتَ الطَّيْرِ فِي جَوِّ السَّمَاءِ، ثُمَّ قُلِبَتْ فَخَرَجَتِ الْإِفْكَةُ عَلَيْهِمْ، فَمَنْ أَدْرَكَتْهُ الْإِفْكَةُ، قَتَلَتْهُ وَمَنْ خَرَجَ أَتْبَعَتْهُ، حَيْثُ كَانَ حَجَرًا فَقَتَلَتْهُ، قَالَ: فَارْتَحَلَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ حَتَّى إِذَا بَلَغَ مَكَانَ كَذَا وَكَذَا مِنَ الشَّامِ، فَمَاتَتِ ابْنَتُهُ الْكُبْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الْوَرِيَّةُ، ثُمَّ انْطَلَقَ حَيْثُ شَاءَ اللَّهُ أَنْ يَبْلُغَ فَمَاتَتِ الصُّغْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الرُّعُونَةَ، فَمَا بَقِيَ مِنْهُنَّ إِلَّا الْوُسْطَى


3317.

… இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர்களான வானவர்கள் லூத் (அலை) அவர்களிடம் வந்தபோது, அவர்களைத் தம் விருந்தினர்கள் என்றே அவர் நினைத்தார். அவர்களைச் சந்தித்து, தமக்கு அருகிலேயே அமர வைத்தார். தனது மூன்று மகள்களையும் அழைத்து வந்து, அவர்களைத் தனது விருந்தினர்களுக்கும் தனது குடும்பத்தார்களுக்கும் அருகில் அமர வைத்தார். அப்போது அவருடைய கூட்டத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர்.

அவர்களைக் கண்ட லூத் (அலை), ‘இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என் விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்’ (ஹூத்: 78) எனக் கூறினார். அதற்கு அவர்கள், ‘உம்முடைய புதல்விகளில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீர் அறிவீர்; நாங்கள் எதை நாடுகிறோம் என்பதையும் நீர் நிச்சயமாக அறிவீர்’ (ஹூத்: 79) என்றனர்.

லூத் (அலை), ‘உங்களை எதிர்க்க எனக்குப் பலம் இருக்கக் கூடாதா? அல்லது ஏதேனும் பலமான ஆதரவை நான் பெறக்கூடாதா?’ (ஹூத்: 80) என்று வருந்திக் கூறினார். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் லூத் (அலை) பக்கம் திரும்பி, ‘நிச்சயமாக நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்; அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது’ (ஹூத்: 81) எனக் கூறினார்.

பிறகு அவர்களின் கண்களை ஜிப்ரீல் (அலை) பார்வையற்றதாக்கினார். அவர்கள் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டு பின்வாங்கிச் சென்றனர். வாசலில் நின்றவர்களிடம், ‘மிகப்பெரிய சூனியக்காரனிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம், அவர் எங்கள் பார்வையைப் பறித்துவிட்டார்’ என்று கூறினர். அவர்கள் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தனர்.

இரவின் ஒரு பகுதியில் அந்த ஊர் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உயர்த்தப்பட்டது. வானத்திலுள்ள பறவைகளின் சத்தம் அவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு அது உயர்த்தப்பட்டது. பிறகு அது தலைகீழாகப் புரட்டப்பட்டது. அவர்கள் மீது கற்கள் பொழிந்தன. அந்தக் கற்கள் யார் மீது விழுந்ததோ அவர்களைக் கொன்றது. தப்பித்து ஓடியவர்களையும் கற்கள் பின்தொடர்ந்து சென்று அவர்கள் எங்கிருந்தாலும் கொன்றது.

லூத் (அலை) அவர்கள் தனது மூன்று மகள்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். ஷாம் தேசத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, அவருடைய மூத்த மகள் மரணமடைந்தார். அங்கே ‘அல்-வரிய்யா’ என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்று உருவானது. பிறகு அல்லாஹ் நாடிய இடத்திற்குச் சென்றபோது இளைய மகளும் மரணமடைந்தார். அங்கே ‘அர்-ருஊனா’ என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்று உருவானது. அவர்களில் நடுத்தர மகள் மட்டுமே எஞ்சியிருந்தார்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம் ஆகிய அறிஞர்களின் நிபந்தனைப்படி சரியானது ஆகும். ஆனால் அவர்கள் இதனைத் தமது நூல்களில் பதிவு செய்யவில்லை.

இதுவும், இது போன்ற செய்திகளும் மவ்கூஃப் (நபித்தோழர் ஒருவரின் சொந்தக் கூற்று) வகையைச் சார்ந்தது என்று யாராவது தவறாக எண்ணக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஒரு நபித்தோழர் ஒரு குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் விளக்கம் புகாரி, முஸ்லிம் அறிஞர்களிடம் முஸ்னத்-நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு உடைய செய்தி என்ற தகுதியையே பெறுகிறது.